Home கருத்தாய்வு கவிதை: “பாக் சமாட்டும் காவல் துறையும்!”

கவிதை: “பாக் சமாட்டும் காவல் துறையும்!”

937
0
SHARE
Ad

samad merdeka

#TamilSchoolmychoice

நகைக் கடையில் கொள்ளை!

தடுக்க வந்த முதலாளி மீது

குண்டு மழை!

 

சாலை சந்திப்பில்

காருக்குள் இருந்த

அதிகாரி சுடப்பட்டு மரணம்!

 

வீடு புகுந்து அரிவாளால்

மூவர் வெட்டிக் கொலை!

 

காப்பிக் கடையில்

பானம் அருந்திக் கொண்டிருந்தவர்

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்

சுட்டதில் அங்கேயே மரணம்!

 

வீடு புகுந்து,

கத்தி முனையில்,

அடுக்கடுக்கான திருட்டுகள், கொள்ளைகள்!

 

குண்டர் கும்பல்களின் பகிரங்க மோதல்கள்!

ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடுகள்!

 

இவையெல்லாம் பரவாயில்லை! விட்டு விடுவோம்!

பின்னர் பார்த்துக்கொள்வோம்!

 

இப்போதைக்கு,

ஓடுங்கள்! உடனே ஓடுங்கள்!

டத்தாரான் மெர்டேக்காவில்

80 வயதுக் கிழவன் ஏதோ கொடியேற்றுகிறானாம்!

பிடித்து வாருங்கள் அவனை!

உடனே விசாரிக்க வேண்டும்!

 

-இரா.முத்தரசன்