Home நாடு ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): அரசு தரப்பு வழக்கறிஞராக ஷாஃபி பிரதிநிதிக்கலாம் – நீதிமன்றம் அனுமதி

ஓரினப்புணர்ச்சி வழக்கு (II): அரசு தரப்பு வழக்கறிஞராக ஷாஃபி பிரதிநிதிக்கலாம் – நீதிமன்றம் அனுமதி

514
0
SHARE
Ad

shafeeகோலாலம்பூர், செப் 18 – அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி (II) வழக்கில் தனியார் வழக்கறிஞர் முகமட் ஷாஃபி அப்துல்லா பிரதிநிதிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரது நியமனத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் கர்பால் சிங் தாக்கல் செய்திருந்த மனு விசாரணை செய்த, மூவர் அடங்கிய சட்டக்குழுவின் தலைவரான நீதிபதி ரம்லி அலி, சஃபியின் நியமனம் ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு என்று அறிவித்தார்.

அன்வாரின் மீது அவரது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தாக்கல் செய்திருந்த ஓரினப்புணர்ச்சி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் அன்வாருக்கு விடுதலை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும் அவ்வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice