Home இந்தியா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த ஜனாதிபதி ஒப்புதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த ஜனாதிபதி ஒப்புதல்

451
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 26- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி மற்றும் முறைகேடுகள் இருப்பதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

அதேசமயம் நிதி நெருக்கடி காரணமாக பல்கலைக் கழகத்தை நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.

pranab2இதற்கிடையே, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதால், ஊழியர்கள் கடந்த ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரம்பின்றி மூடப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த பிரச்சினைகளை தீவிரமாக ஆராய்ந்த தமிழக அரசு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சட்ட மசோதாவை மே மாதம் நிறைவேற்றியது. பின்னர் அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், இனி அரசு நடைமுறைப்படி பல்கலைக்கழக செயல்பாடுகள் இருக்கும்.

பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை வரவேற்றுள்ள பல்கலைக் கழக ஊழியர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.