Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்! – முக்ரிஸ் மகாதீருக்கு முகைதீன் யாசின் வலியுறுத்து

தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்! – முக்ரிஸ் மகாதீருக்கு முகைதீன் யாசின் வலியுறுத்து

680
0
SHARE
Ad

muhidinகோலாலம்பூர், அக். 21- அம்னோ உதவித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய கெடா மாநில முதலமைச்சரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் மகனுமான முக்ரிஸ், தனது தேர்தல் முடிவைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் வலியுறுத்தினார்.

இத்தேர்தலில் முக்ரிஸ் மகாதீர் தோல்வியைத் தழுவிய போதிலும் மற்ற வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாகவே விளங்கினார்.

அவர் தோல்வியைத் தழுவினாலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட வெற்றியே பெற்றிருப்பதாக தாம் கருதுவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இத்தேர்தலில் 9 தொகுதிகளின் ஆதரவு வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது இங்கே குறிப்பிடத்தக்கது.