Home நாடு “மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்” – துரைராஜ்

“மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்” – துரைராஜ்

736
0
SHARE
Ad

IMG_9630கோலாலம்பூர், அக் 21 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.துரைராஜ், மலேசிய எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக இணைக்க வேண்டும் என்றும், தமிழ் பத்திரிக்கையாளர்களின் படைப்புகளுக்கு ஓர் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

துரைராஜ் அவர்களின் உரை பின்வருமாறு:-

“மலேசியத் தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கென ஓர் அறவாரியம் அமைத்து ஆண்டுதோறும் அவர்களில் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும். இந்நாட்டில் முழு நேர எழுத்தாளர், பகுதி நேர எழுத்தாளர், பத்திரிக்கை எழுத்தாளர், பொழுது போக்கு எழுத்தாளர் என்று பல வகை எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனால் யாரும் முழு நேர எழுத்தாளர்களாக செயல்படவில்லை.”

#TamilSchoolmychoice

“அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஓரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும். அப்போது தான் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மேலும் பல நல்ல படைப்புகளை சேர்க்க முடியும்” என்று தெரிவித்தார்.

– பீனிக்ஸ்தாசன்