Home நாடு “மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஓர் ஆலமரம் – அதை அவ்வளவு எளிதில் யாராலும் சாய்த்து...

“மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஓர் ஆலமரம் – அதை அவ்வளவு எளிதில் யாராலும் சாய்த்து விட முடியாது” – இராஜேந்திரன்

727
0
SHARE
Ad

IMG_9628கோலாலம்பூர், அக் 21 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவின் முதல்நாள் நிகழ்வில் பேசிய சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த 50 ஆண்டு காலத்தில் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. தனிப்பட்ட முறையில் என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அதை அவ்வளவு எளிதில் யாராலும் வெட்டி சாய்த்து விட முடியாது என்று கூறினார்.

இராஜேந்திரனின் உரை பின்வருமாறு:-

“கடந்த 50 ஆண்டுகளில் சங்கம் என்ன செய்தது என்று யாராலும் கேட்டுவிட முடியாது. காரணம் அந்தக் கேள்விக்கு இடம் இல்லாத வகையில் சங்கம் தனது பணிகளை மிகச் சிறப்பாக செய்திருக்கிறது.”

#TamilSchoolmychoice

“குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சங்கத்தின் மூலம் எழுத்தாளர்கள் பயனடையும் வகையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அந்த மகிழ்ச்சி உங்களுக்கு இருக்கும் என்று நம்புகின்றேன்.”

“காய்த்த மரம் தான் கல்லடிபடும். காய்த்து கனிந்து கிடக்கும் அந்த மரத்தை அதன் கனிகளைப் பார்க்காமல் வேர் வரை தோண்டி தோண்டி அதன் குறைகளையே கூறிக்கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் விமர்சனம் செய்வதால் சங்கம் தனது சேவைகளில் இருந்து பின்வாங்காது.”

“இந்த பொன்விழா நிகழ்வை ஏற்பாடு செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக தூரநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு வந்தோம். ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மூலமாக ஒரு லட்சம் மானியம் கிடைத்தது. அதில் ஒரு சல்லிக்காசு கூட சங்கம் செலவு செய்யாமல் 50 எழுத்தாளர்களுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கின்றோம்.”

“நான் தலைவராக இருந்து இன்னும் இரண்டு காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கின்றேன். அதில் முதலாவது மலேசியத் தமிழ் இலக்கியத்தை கணினியில் ஆவணமாகச் சேர்க்க வேண்டும்.எல்லா படைப்புக்களையும் மின்நூல்களாகக் கொண்டுவர வேண்டும் அதற்கு நான் நம்பியிருப்பது நமது தமிழ் விஞ்ஞானி முத்தெழிலனைத் தான். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அதற்கான ஆர்வமும் எங்களிடம் இருக்கிறது.”

“இரண்டாவது, ஓர் ஆண்டுக்கூட்டத்தில் 3 எழுத்தாளர்களுக்காவது தலா 10,000 ரிங்கிட் மானியமாக வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 1 எழுத்தாளருக்காவது அந்தத் தொகையை வழங்க வேண்டும். அதற்காக நான் நம்பியிருப்பது அரசாங்கத்தைத் தான்” இவ்வாறு இராஜேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

– பீனிக்ஸ்தாசன்