Home நாடு சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: சீனப் பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு – முகைதீன் யாசின்...

சுங்கை லிமாவ் இடைத்தேர்தல்: சீனப் பள்ளிகளுக்கு 2.25 மில்லியன் நிதி ஒதுக்கீடு – முகைதீன் யாசின் அறிவிப்பு

741
0
SHARE
Ad

Muhyiddin Yassinகெடா, அக் 30 – வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சுங்கை லிமாவ் இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதியிலுள்ள சீன மக்களைக் கவரும் விதமான சீனப்பள்ளிகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறது தேசிய முன்னணி.

சுங்கை லிமாவ் சீன கல்வி நிதியாக சுமார் 200,000 ரிங்கிட்டை துணைப் பிரதமர் முகைதீன் யாசின் இன்று அறிவித்தார்.

அத்துடன், சுங்கை லிமாவ் தொகுதியிலுள்ள மூன்று சீனப் பள்ளிகளான RJK (C) Aik Min – க்கு 1 மில்லியனும், SRJK (C) Yuk Meng – க்கு 1 மில்லியனும், SRJK (C) Pek Hwa – க்கு 50,000 ரிங்கிட்டும் நிதி ஒதுக்க முகைதீன் யாசின் அனுமதியளித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், சீனப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் மட்டும் சுமார் 1.8 பில்லியன் கல்வியமைச்சினால் வழங்கப்படுகிறது என்பதை முகைதீன் யாசின் சுட்டிக் காட்டினார்.

“எனவே எதிர்கட்சிகள் நாங்கள் சீனப் பள்ளிகளுக்கு உதவவில்லை என்று கூறினால் அதை நம்பாதீர்கள். சீனர்களின் கல்வி தொடர வேண்டும். அதற்கு நாங்கள் நிதி ஒதுக்குவோம்” என்று முகைதீன் யாசின் உறுதியளித்தார்.