Home இந்தியா பாராளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி குஜராத்தில் போட்டியிட முடிவு

பாராளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி குஜராத்தில் போட்டியிட முடிவு

520
0
SHARE
Ad

1

புதுடெல்லி, நவ 13 – பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், இப்போதே பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மோடிக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா கூறிவருகிறது.

பிரதமர் வேட்பாளரான அவர் உத்திரபிரதேசத்தில் போட்டியிடுவார் என்று முன்பு தகவல்கள் வெளியாகின. அந்த மாநிலத்தில் உள்ள கான்பூர், லக்னோ, வாரனாசி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

இப்போது அந்த முடிவு மாற்றம் செய்யப்பட்டு விட்டதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் வேட்பாளரான அவர், பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்ய வேண்டியது இருக்கும்.

இந்த சூழ்நிலையில் உத்திரபிரதேசத்தில் போட்டியிட்டால், அதற்கு தனி கவனம் செலுத்த வேண்டியது வரும். எனவே, பாராளுமன்ற தேர்தலில் மோடி குஜராத்தில் போட்டியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா முடிவு செய்து இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் கைப்பற்ற வேண்டும் என்று நரேத்திர மோடி விரும்பினார். எனவே, உத்திரபிரதேச பாரதிய ஜனதா பொறுப்பாளராக அவரது நெருங்கிய நண்பரான அமித்ஷாவை நியமித்தார். நரேத்திர மோடி உத்திர பிரேதேசத்தில் போட்டியிடுவதால் அவரது நண்பர் அந்த மாநில பாரதிய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பீகார் மாநலம் பாட்னாவில் போட்டியிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இப்போது மோடி குஜராத்தில் போட்டியிடுவதே பாதுகாப்பானது என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது. எனவே, அவர் குஜராத்தில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.