Home நாடு வாக்காளர்களை பீதியடைய செய்ய வேண்டாம் மூசாவுக்கு ஜ.செ.க. கோரிக்கை

வாக்காளர்களை பீதியடைய செய்ய வேண்டாம் மூசாவுக்கு ஜ.செ.க. கோரிக்கை

837
0
SHARE
Ad

index

கோலாலம்பூர்,பிப்.12-வாக்காளர்களை பீதியடைய செய்யும் வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டாம் என்று டான்ஶ்ரீ மூசாவை ஜ.செ.க.மத்திய செயலவை உறுப்பினரும், சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான அந்தோணி லோக் கோரிக்கை வைத்தார்.

வரும் பொதுத்தேர்தலில் தோல்வி அடையும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கும் என்ற அவரின் பேச்சு வாக்காளர்களை பீதியடைய செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

யாரை தேர்ந்தெடுப்பது என்பது மக்களின் கையில் உள்ளது. தேர்தலுக்கு பின் போராட்டம் வெடிக்கும் என்று கூறுவது வாக்காளர்களை பீதியடைய செய்யும் விதமாக இருப்பதால் இது போன்ற ஆருடங்கள் கூறுவதை டான்ஶ்ரீ மூசா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.