கோலாலம்பூர்,பிப்.12- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் தோல்வி காணும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கலாம் என்று அரச மலேசிய காவல்துறையின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ மூசா ஹசான் எச்சரிக்கிறார்.
பொதுத்தேர்தலில் தங்களுக்கு சாதகமாக முடிவுகள் இருக்கவில்லை என்றால் சில கட்சிகள் அரபு நாடுகளில் வெடித்த புரட்சிகள் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும் என்று தெரிவித்தார்.
வெற்றி பெறும் கட்சிகளை கவிழ்ப்பதற்காகத் தங்கள் ஆதரவாளர்களை தூண்டி விட்டு குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நான் எந்த கட்சியிலும் சேர போவதில்லை. ஆனால் நாட்டின் ஒற்றுமையையும், அமைதியும் மிக முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மற்றத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.