Home வணிகம்/தொழில் நுட்பம் குறைந்த விலை கட்டணத்துடன் மலிண்டோ ஏர்

குறைந்த விலை கட்டணத்துடன் மலிண்டோ ஏர்

695
0
SHARE
Ad

malindo-air-staff

கோலாலம்பூர், நவம்பர் 27- குறைந்த விலை கட்டணச் சேவை நிறுவனமான மலிண்டோ ஏர் ஆண்டு இறுதி விற்பனையாக உள்நாட்டு ஒரு வழி பயணங்களுக்கு 39 வெள்ளியும் அனைத்துலக ஒரு வழி பயணங்களுக்கு 75 வெள்ளியும் என அறிவித்துள்ளது.

இந்த மலிவு விலைக் கட்டணம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், சுபாங் விமான நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து உள்நாடு, ஜாக்கர்த்தா, பாலி போன்ற இடங்களுக்கு பயணிப்பவர்களுக்கு பொறுந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தக் குறைந்த விலை பயணத்தை அனுபவிக்க பயனீட்டாளர்கள் இன்று முதல் 2013 டிசம்பர் 1 ஆம் தேதி வரை www.malindoair.com என்ற அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 2014 ஜனவரி 2 ஆம் தேதி முதல் 2014 மே 22 ஆம் தேதி வரை பயணத்தை மேற்கொள்ளலாம் என மலிண்டோ ஏர் அறிவித்துள்ளது.

வணிக வகுப்புக்கு 40 கிலீ கிராம் மலிவு வகுப்புக்கு 15 கிராம் பயண பைகளுக்காக எடை ஒதுக்கீடும் ஏர் மலிண்டோ ஏற்பாடு செய்துள்ளது.