Home இந்தியா இந்தியாவை பாகிஸ்தான் ஒரு போதும் வெல்ல முடியாது- நவாஸ் ஷெரீப்புக்கு மன்மோகன் பதிலடி

இந்தியாவை பாகிஸ்தான் ஒரு போதும் வெல்ல முடியாது- நவாஸ் ஷெரீப்புக்கு மன்மோகன் பதிலடி

463
0
SHARE
Ad

manmohan_sharif_02072013 (1)

புதுடெல்லி, டிசம்பர் 5- இந்தியாவுடன் நடந்த போரில் என்றுமே பாகிஸ்தான் வென்றதில்லை. என் வாழ்நாளில் இனிமேலும் பார்க்கப் போவதில்லை என பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ‘‘காஷ்மீர் பிரச்னையை மையமாக வைத்து, அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் மீண்டும் போர் ஏற்படலாம்’’ என குறிப்பிட்டார்.

மேலும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காஷ்மீர் மக்களின் விருப்பப்படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் காஷ்மீரில் அமைதிக்கு வாய்ப்பில்லை. இந்தியாவின் பிடியில் உள்ள காஷ்மீர் விடுதலை பெறுவதுதான் எனது கனவு. அது என் வாழ் நாளுக்குள் நனவாக வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தியாதான் ஆயுத போட்டியில் ஈடுபட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதனால் பாகிஸ்தானும் ஆயுத போட்டிக்குள் இழுக்கப்படுகிறது. இல்லையென்றால், ஆயுதங்களுக்கு செலவிடும் பணத்தை ஏழ்மையை ஒழிக்க பயன்படுத்தலாம்’’ என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு நேற்று பதிலடி கொடுத்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ‘‘இந்தியாவை போரில்  ஜெயிக்க பாகிஸ்தானுக்கு வாய்ப்பே இல்லை. என் வாழ்நாளில் அதுபோல் நடக்கவே நடக்காது’ என கூறினார்.