Home நாடு “கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது”

“கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது”

856
0
SHARE
Ad

577029_512272362170976_1927615256_nகோலாலம்பூர், டிச 7 – எழுத்தாளர் என்பவர் யார்? எழுத்தை ஆள்பவர்கள்; செதுக்குபவர்கள்; செம்மைப்படுத்துபவர்கள்! எழுத்தாளர்களுக்கு எழுத்து சுதந்திரம் உண்டு. எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம்; உணர்வுகளையும் விவரிக்கலாம். பாகுப்படுத்தலாம்!

ஆனால், எழுத்துகளில் அத்துமீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும். “கழிவறையும் ; பழிவாங்கும் வழிமுறையும்” கதை என்ற பெயரில் ஒட்டு மொத்தப் பெண்களையும்; பெற்றத் தாய்; பெண் தெய்வம் உட்பட அனைவரையும் கொச்சைப்படுத்தி மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தைத் தலைக்குனிய வைத்த படைப்பாளனை நினைத்து கூனி குறுகி நிற்கிறேன். வள்ளுவர் சொன்னார், ஆண்டாள் சொன்னார் என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசுவது சிறந்த படைப்பாளருக்கு அழகில்லை! தமிழை விட தொன்மையான, அழகான மொழி ஏதுமில்லை. கொஞ்சைப் படுத்தாமல், மாசுப்படுத்தாமல் எழுதுவதுதான் தாய்த் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை…! தாயையே கொஞ்சைப்படுத்துபவர்களிடம் இதை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான்!

இந்த நூற்றாண்டில், நவீன யுகத்தில் ஒழுக்கமாக வாழ வேண்டும்; நாகரீகமாக வாழ வேண்டும் என்பதற்காகதான் வள்ளுவர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார். வள்ளுவரின் காமத்துப்பாலை படிக்கும் எல்லோருக்குமே சட்டென்று அதன் பொருள் விளங்கி விடாது. தொன்மையான தமிழில் அழகாக செதுக்கப்பட்ட உலக மறை. ஆனால், புத்திலக்கியம் என்ற பெயரில் புனையப்பட்ட (புணரப்பட்ட) இந்தக் கதையைப் பத்து வயது பாலகன் படித்தாலும் புரிந்து கொள்ள முடியும்! சிந்தனையை விரிவாக்க வேண்டும் ; படைப்பிலக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றெல்லாம் கங்கணம் கட்டுவது இது போன்ற படைப்புகளுக்குதான் என்பதை நினைக்கும் போது… மனம் பதறுகின்றது! மலேசிய நவீன இலக்கிய உலகம் எங்கே போகிறது? வளர்ந்து வரும் இளையதலைமுறை படைப்பாளர்களின் சிந்தனைத் திறனை திசை திருப்ப இத்தகைய படைப்புகள் அடித்தளமிடுகிறதா? இதுதான் சிந்தனை மாற்றமா? வளர்ச்சியா?

#TamilSchoolmychoice

ஒரு மஞ்சள் பத்திரிகையை விட மோசமான படைப்பான, “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” ; தாய்மை என்பது புனிதமா? என்று “கருவறைகளை”ப் மாசுப்படுத்தியது தாய்மைக்கே இழுக்கு! தாயைப் புணர்தல்; காளியம்மனைப் புணர்ச்சிக்கு அழைப்பது போன்ற வசனங்கள் எழுதும் போது அவர் தாய், சகோதரிகளை நினைத்து பார்க்கத் தவறியது ஏனோ? கதை என்ற பெயரில் “கருமங்களை” எழுதி கர்மாவைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

மலேசியப் பெண் படைப்பாளர் என்ற ரீதியில் முழுமனதாக எனது கண்டனத்தை வெளிப்படுத்துகிறேன்!. மாசுப்படுத்தி விட்டு மன்னிப்புக் கேட்பது….? மன்னிப்பது மனிதர் மரபு; கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! மன்னிப்பு……… மனிதர்களுக்கு மட்டும் தான்!

மேற்கண்ட விமர்சனத்தை, நாட்டின்  முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கே.எஸ்.செண்பகவள்ளி(படம்) தனது பேஸ்புக் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.