Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவின் சீனப்புத்தாண்டு சிறப்பு சலுகை!

ஏர் ஆசியாவின் சீனப்புத்தாண்டு சிறப்பு சலுகை!

616
0
SHARE
Ad

airasia-plane-with-url-on-side-665x38911

கோலாலம்பூர், டிசம்பர் 13 – மலிவான பயணத்தை  வற்றாமல் வழங்கி வரும் ஏர் ஆசியா  வரும் சீன பெருநாளை முன்னிட்டு கூடுதல் பயணங்களை அதிகரித்துள்ளது.

2014 புத்தாண்டு ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி வரையிலுமான ஏர் ஆசியாவின்  பயணச்சீட்டுகளைப் பெற இப்போது அணுகலாம்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர்-பினாங்கு; பினாங்கு-கூச்சிங்; ஜோகூர்பாரு,கூச்சிங் – சிங்கப்பூர் என இப்பயணங்களுக்கான சீட்டுகள் விற்பனைக்கு தொடங்கிவிட்டது.

தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பவும் சீனப் புத்தாண்டைக் குடும்பத்தோடு கொண்டாடவும் மக்கள் பயணத்தை மகிழ்வாக்கி வரும் ஏர் ஆசியாவின் இக்கூடுதல் பயணங்களை  ரிம30 வெள்ளியிலிருந்து (எண்ணெய் , விமான நிலைவரியின்றி) அனுபவிக்கலாம்.

கோலாலம்பூரிலிருந்து ஹட்யாய், பாலி, பண்டார் ஆச்சே, யங்கூன், மக்காவ், கோல்கத்தா, குவாங்சாவ் பயணங்களும் இதில் அடங்கும். ஏர் ஆசியா எக்ஸ் தொலைத்தூர பயணங்களையும் ஒரு வழி கட்டணமாக ரிம 179 முதல் ரிம 699 வரை வழங்குகிறது ஏர் ஆசியா