Home நாடு சிக்கலில் ‘ஆல்விவி’ ஜோடி! உறவில் விரிசல்!

சிக்கலில் ‘ஆல்விவி’ ஜோடி! உறவில் விரிசல்!

582
0
SHARE
Ad

KL44_150713_KES SENDAகோலாலம்பூர், ஜன 4 – ஆபாச வலைப்பதிவாளர்களான ஆல்வின் டான் மற்றும் விவியன் லீ நினைவிருக்கிறதா? ரமலான் மாதத்தில் பக்குத்தேவுடன் நோன்பு திறக்க வாருங்கள் என்ற அறிவிப்புடன் தங்கள் புகைப்படத்தை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து பெரும் சர்சையில் சிக்கினார்கள்.

அதுமட்டுமின்றி தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்வது போலான புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது என்று அவர்கள் இருவரின் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

வரும் புதன்கிழமை இருவரும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு செல்லவுள்ள நிலையில், இருவருக்குமிடையே பிணக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதே உடலுறவு விவகாரம் தான்.

#TamilSchoolmychoice

மற்றவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது தனக்கு முன் தான் நடத்தப்பட வேண்டும் என்ற தங்களின் கட்டுப்பாட்டை லீ மீறிவிட்டதாக ஆல்வின் குற்றம்சாட்டியுள்ளார்.

தனக்குத் தெரியாமல் லீ வேறு ஒருவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதாகவும், இது போல் அடிக்கடி நடப்பதாகவும் ஆல்வின் மலாய் மெயில் இணையத்தள பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

“எங்களின் கொள்கை கட்டுப்பாடு நிறைந்தது. மற்றவர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது ஒருவருக்கொருவர் கண் முன்னரே நடக்க வேண்டும். இதற்கு பின்னால் எந்த ஒரு தில்லு முல்லு வேலையும் நடக்கக் கூடாது. இது தான் எங்களின் கொள்கை” என்று 25 வயதான ஆல்வின் குறிப்பிட்டுள்ளார்.

“நான் வெளிப்படையான உறவுகளை வலியுறுத்தி வருகின்றேன். ஆனால் அவளால் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அது தான் எனக்கு பிரச்சனையாக இருக்கிறது. எனக்கு பின்னால் மறைமுகமாக உறவுகளை வைத்துக்கொள்கிறாள்” என்று ஆல்வின் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து லீ நேற்று மலாய் மெயில் இணையத்தள பத்திரிக்கைக்கு பதிலளிக்கையில், தான் ஆல்வினுடனான உறவை நீடிக்க விரும்புவதாகவும், கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி தான் மற்றவர் ஒருவருடன் உறவு வைத்திருந்த வேளையில் ஆல்வினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டதாகவும் லீ ஒப்புக்கொண்டார். ஆனால் அது ஒருமுறை மட்டுமே என்றும் லீ குறிப்பிட்டார்.

“இந்த உறவு நீடிக்க நான் எதையும் செய்யத் தயாராக உள்ளேன். காரணம் நாங்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக இருக்கின்றோம். அவர் பிரச்சனையை சரி செய்ய நினைக்கவில்லை. ஆனால் நான் நினைக்கின்றேன். ஆல்வின் கூட கடந்த செப்டம்பர் மாதம் என்னை ஏமாற்றி இருக்கிறார்.” என்று லீ தெரிவித்தார்.

மேலும், லீ தனது பேஸ்புக் பக்கத்தில், “நான் உன்னை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆமாம் நான் உனக்கு தெரியாமல் உடலுறவு வைத்துக்கொண்டேன். ஆனால் மனதளவில் உனக்காக மட்டுமே இருக்கின்றேன். நீ நினைத்ததை விட உன் மேல் அன்பு வைத்திருக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஆல்வினும் தான் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதாகவும், ஆனால் லீவுடன் தனிப்பட்ட முறையில் இருக்க முடியாது என்று தெரிந்த பின்பு தான் அதை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆல்விவி என்ற பெயரில் சமூக வலைத்தளங்கலான பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் ஆபாச புகைப்படங்களையும், காணொளிகளையும் வெளியிட்டு வந்த இந்த ஜோடி, அண்மையில் தாங்கள் பிரிவதாக அறிவித்துள்ளனர்.