Home இந்தியா தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் காணாமல் போகும் – கெஜ்ரிவால் சூளுரை

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் காணாமல் போகும் – கெஜ்ரிவால் சூளுரை

554
0
SHARE
Ad

Kejriwal-300X200புதுடில்லி, ஜன 15 – எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள லோக்சபா நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் (படம்) சூளுரைத்துள்ளார்.

தற்போது நாடு உள்ள நிலையில் மக்களிடையே இரண்டு கட்சிகள் தான் வரவேற்பை பெற வாய்ப்புகள் உள்ளது. ஒன்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றொன்று ஆம் ஆத்மி. ஆனால் பாஜக தற்போது கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை போன்று நாடு முழுவதும் ஊழல் புரிந்த தலைவர்களை எல்லாம் மீண்டும் தன்னுடன் இணைத்து கொண்டிருக்கிறது. அதே சமயம் ஆம் ஆத்மி தன்னுடைய உயர்வான கொள்கைகளால் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி வரும் லோக்சபா தேர்தலுக்குள் மிகப்பெரிய அளவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொண்டர்கள் வித்தியாசமான வழியில் பணியாற்றிவருகின்றனர். காங்கிரஸுடன் ஆம் ஆத்மி நேரடியாக மோதினாலும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.