Home நாடு பத்துமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை!

பத்துமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை!

759
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜன 18 – பத்துமலையில் தைப்பூசம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் காவடிகளை ஏந்திக்கொண்டு பாரம்பரிய மேள தாளங்களுடன் பத்துமலை முருகனை தரிசித்தனர்.

பலவகையான காவடிகள் எடுத்து வரப்பட்டன. அதில் வண்ண மயமான மயில் தோகைகள் சொருகப்பட்ட  காவடிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

காலை 10 மணிக்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆலயத்திற்கு வந்தார். அவரை ம.இ.கா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், கெராக்கான் உதவித் தலைவர் ஏ.கோகிலம் பிள்ளை மற்றும் இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு ஆகியோர் வரவேற்றனர். மேலும் துணை அமைச்சர் டத்தோ சரவணன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

DSCN1374DSCN1382

DSCN1341DSCN1340

DSCN1339 (1) DSCN1338

படங்கள் : ஆர்கே