Home நாடு இஸ்லாம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ வை பயன்படுத்த உரிமை இல்லை – மகாதீர்

இஸ்லாம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ வை பயன்படுத்த உரிமை இல்லை – மகாதீர்

747
0
SHARE
Ad

mahathir-forehead1கோலாலம்பூர், ஜன 24 – அரபு மொழியில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற சொல்லை இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பயன்படுத்த  வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மகாதீர், “எனது பார்வையில் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

தான் பிரதமராக இருந்த காலத்தில் இந்த விவகாரம் உருவெடுத்தபோது, அதை சுமூகமாக தீர்த்ததாகவும், தற்போது எதற்காக மீண்டும் இந்த பிரச்சனை உருவாகியுள்ளது என்றும் மகாதீர் குறிபிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“இவ்விவகாரத்திற்கு முன்பே தீர்வு காணப்பட்டுவிட்டது. ஆனால் இப்போது மீண்டும் ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சபா, சரவாக் மாநிலங்களில் மலாய் மொழியில் உள்ள பைபிள்கள் அதிகாரிகளால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், அது இஸ்லாமியர்கள் கைகளில் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.