பெட்டாலிங் ஜெயா, ஜன 25 – நாடு முழுவதும் குறிப்பாக கட்டுமான தளங்களில் டெங்கி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
டெங்கியை ஒழிப்பது குறித்து அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறுகையில், தங்கள் இருப்பிடங்கள் கொசுக்களின் பிறப்பிடமாக இருப்பது பலருக்கு தெரிவதில்லை” என்று சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கூறுகையில், “கோலாலம்பூரில் சில இடங்களை அடையாளம் கண்டோம். டெங்கி கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக கட்டுமானத் தளங்கள் மாறிவிடக்கூடாது. கட்டுமானத் தளங்களில் உள்ள குப்பைகளை அகற்ற அறிவுரை கூறியுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.