Home கலை உலகம் ஏப்ரல் 11ல் கோச்சடையான் வெளியீடு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏப்ரல் 11ல் கோச்சடையான் வெளியீடு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

539
0
SHARE
Ad

kochadaiyan-325x244

சென்னை, பிப் 4- ‘கோச்சடையான்’ படத்தின் முதல் புகைப்படம் வெளியானதில் இருந்து, படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்க, வெளியீட்டு தேதியும் இழுத்துக்கொண்டே போனது.

தீபாவளி, ரஜினி பிறந்த நாள், பொங்கல் என கோச்சடையானின் வெளியீட்டு தேதி தள்ளிக் கொண்டே போனது. தற்போது ஏப்ரல் 11ல் ‘கோச்சடையான்’ வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியாவில் Motion Capture Technologyல் உருவாகி வரும் திரைப்படம் ‘கோச்சடையான்’. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். ‘கோச்சடையான்’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளதால். தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செளந்தர்யா. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.