Home உலகம் இலங்கை இறுதிகட்ட போர் ஆதாரங்களை அழிக்கப்பட்டன : ஆஸ்திரேலிய ஆய்வு அறிக்கை

இலங்கை இறுதிகட்ட போர் ஆதாரங்களை அழிக்கப்பட்டன : ஆஸ்திரேலிய ஆய்வு அறிக்கை

584
0
SHARE
Ad

lanka

கொழும்பு, பிப் 6- இலங்கையில் 2008, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை இலங்கை அரசு அழித்துள்ளதாக ஆஸ்திரேலிய அமைப்பின் ஆய்வு அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொதுநல வழக்கு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில் ராணுவம் தான் அதிக அளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது.

#TamilSchoolmychoice

போரின்போது மக்கள் கூட்டமாக கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை அழிப்பதற்ககு இலங்கை அரசே உறுதுணையாக இருந்துள்ளது. ஆகையால், இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை அமைப்பில் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை இலங்கைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.