Home இந்தியா பாஜக வுடன் திமுக கூட்டணி என்பது வதந்தி – பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக வுடன் திமுக கூட்டணி என்பது வதந்தி – பொன்.ராதாகிருஷ்ணன்

495
0
SHARE
Ad

549f684c-30e8-4201-b9b8-27c6bbd99b45_S_secvpfசென்னை, பிப் 7 – திமுக வை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்க்கும் முயற்சியை அறிந்த வைகோ, அதிருப்தியில் மோடி நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றார் என்று கூறப்படுகின்றது.

ஆனால் இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து விடக்கூடாது என்று நினைக்கும் சில விஷமிகள் இவ்வாறு பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்.யாரும் அதை நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்தார்.

மேலும், “திமுக வுடன் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை. இந்தியா முழுவதும் மோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தமிழக கிராமங்களிலும் மோடிக்கு நல்ல பெயர் உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice