Home கலை உலகம் ஓய்வு இல்லாத ஸ்ருதிஹாசன்!

ஓய்வு இல்லாத ஸ்ருதிஹாசன்!

542
0
SHARE
Ad

kamal-shruti_650c_011014055943

சென்னை, பிப்  7- திரைப்படத்துறையில் பரபரப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கும் இளைய நட்சத்திரங்களுள் ஒருவரான ஸ்ருதிஹாசன் தன்னுடைய தந்தையின் படத்தில் நடிப்பதற்குத் தேதிகள் ஒத்துவரவில்லை என்று மறுத்துள்ளார். இந்த செய்தியானது இருவருக்குள்ளும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என்ற வதந்திகள் கூட வெளியில் பரவியது.

‘ரமணா’ தமிழ்த் திரைப்படத்தின் இந்தி மறுபதிவான ‘கப்பார்’, ‘வெல்கம் பேக்’ இந்தித் திரைப்படம், ‘ரேஸ் குர்ரம்’ தெலுங்குப் படம் மற்றும் சில பெயரிடப்படாத தமிழ்ப் படங்களில் ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பிலிருந்து அடுத்த படத்திற்கு என்று இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பதாகவும் தனக்கென்று தனியான நேரமே இல்லையென்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த சில மாதங்களாக இதே முறையில்தான் வேலை செய்துகொண்டிருப்பதாகக் கூறிய அவர் புது வருடத்தில்கூட சில நாட்கள் ஒய்வுக்குப்பின்னர் நடிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறினார். விருப்பத்துடனே இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், சமீபத்தில் மேற்கொண்ட குடல் அறுவை சிகிச்சையின் போதும் சில நாட்களே ஒய்வு எடுத்ததாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் தன்னுடைய தந்தை கமல்ஹாசன் அவருடைய ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிப்பது பற்றிக் கேட்டதாகத் தெரிவித்த ஸ்ருதி தேதிகள் இல்லையென்பதால் நடிக்க இயலாது என்பதை அவருக்குத் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.