Home நாடு வேதமூர்த்தி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார்!

வேதமூர்த்தி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார்!

623
0
SHARE
Ad

Waythamurthyகோலாலம்பூர், பிப் 10 – பிரதமர் துறையின் துணையமச்சர் பதவியை ராஜினாமா செய்யும் அதிகாரப்பூர்வ கடிதத்தை ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி இன்று மதியம் பிரதமரிடம் வழங்கியதாக சின் சியூ டெய்லி செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஹிண்ட்ராப் செயலாளர் பி.ரமேஸ், இன்று காலை வேதமூர்த்தி தனது செனட்டர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, ஹிண்ட்ராப் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய முன்னணி ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், நஜிப் தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதனால் வேதமூர்த்தி அரசாங்கத்தில் ஏற்றுள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.