Home நாடு உதயகுமாரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது!

உதயகுமாரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது!

858
0
SHARE
Ad

uthayakumarகோலாலம்பூர், பிப் 19 – தேச நிந்தனை குற்றச்சாட்டிற்காக 30 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார், தனது தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டில் தோல்வி கண்டார்.நேற்று உயர்நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது.

இது குறித்து உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

“பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு உதயகுமார் எழுதிய கடிதம் தேச நிந்தனை குற்றச்சாட்டிற்கு உரியது. 7 ஆண்டுகளுக்கு அவர் செய்த இந்த குற்றத்திற்காக அமர்வு நீதிமன்றம் உதயகுமாருக்கு 30 மாத சிறை தண்டனை வழங்கியிருப்பதில் எந்த தவறும் இல்லை என்று உயர் நீதிமன்றம் கருதுகிறது. எனவே உதயகுமாரின் மேல்முறையீட்டு மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது” என்று நீதிபதி டத்தோ முகமட் அஸ்மான் ஹுசேன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.