Home நாடு இந்தியர்களின் வேதனை உங்களுக்குத் தெரியுமா? கைரிக்கு வேதமூர்த்தி பதிலடி

இந்தியர்களின் வேதனை உங்களுக்குத் தெரியுமா? கைரிக்கு வேதமூர்த்தி பதிலடி

536
0
SHARE
Ad

waytha-450-x-225கோலாலம்பூர், பிப் 20 – பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது பலவீனங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். அதேவேளை இந்நாட்டு இந்தியர்களின் வேதனைகள் என்னென்ன  என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய முன்னணியுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இந்நாட்டு இந்தியர்களுக்கு பல சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தினோம்.

ஆனால்,அந்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை . ஆகவே நான் செனட்டர்- துணையமைச்சர் பதவிகளிலிருந்து விலகினேன் என  ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி  கூறினார்.

#TamilSchoolmychoice

பிரதமர்  டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்  இந்தியர்களுக்கு சிறப்பு நிதி ஒதிக்கீடும்,சுய அதிகாரமும் வழங்கப்படும் எனக் கூறினார். ஆனால் 8 மாதங்கள் ஆன போதிலும் பிரதமர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை என பி.வேதமூர்த்தி தெரிவித்தார்.  அதேவேளை நான் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு,சிறப்பாகப் பணிகளைச் செய்யவில்லை என இளைஞர்  விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் என்னைச் சாடினார்.

உங்களின் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்றால், உங்களால் அமைச்சர் பணிகளை செய்ய முடியுமா? இந்நாட்டு  இந்தியர்கள் படும் வேதனை உங்களுக்குத்  தெரியுமா? என்று ஹிண்ட்ராஃப் தலைவர் பி.வேதமூர்த்தி இளைஞர்  விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடினை கேள்வி எழுப்பினார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்திய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்ற வேதமூர்த்தியின் குற்றச்சாட்டு குறித்து நேற்று கருத்துரைத்த கைரி, பிரதமரை குறை கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ? என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.