ஜாசின், பிப் 20 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை குறை கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்திக்கு, துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சமுதாயத்திற்காக நஜிப் அத்தனை உதவிகளையும் செய்து வரும் நிலையில், அவரை குறை கூறுவதற்கு வேதமூர்த்திக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு உட்பட இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பல வழிகளில் நஜிப் உதவி செய்து வருவதாகவும் கமலநாதன் குறிப்பிட்டார்.
பொதுத்தேர்தலின் போது, ஏழை இந்திய சமுதாயத்திற்கு உதவுவதாக ஹிண்ட்ராப்புக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக நேற்று முன்தினம் வேதமூர்த்தி நஜிப்பை குற்றம்சாட்டினார்.
மேலும், நஜிப் செய்த துரோகத்திற்கு அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.