Home இந்தியா தமிழகத்தில் முதன்முறையாக அணு கழிவுகளில் இருந்து மின்சாரம்!

தமிழகத்தில் முதன்முறையாக அணு கழிவுகளில் இருந்து மின்சாரம்!

405
0
SHARE
Ad

Tamil_Daily_News_87085688115சென்னை, மார்ச் 1 – அடுத்த ஆண்டு இறுதிக்குள் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கப்படும். அதுவும் இந்திய அளவில் தமிழகத்தில்தான் இந்த திட்டம் துவக்கப்படுகிறது என்று அணுசக்தி கழக இயக்குனர் சேகர்போஸ் தெரிவித்தார்.

இந்திய அணுசக்தி கழக இயக்குனர் சேகர்போஸ் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து, அணு கழிவுகள் வீணாக கடலில் கொட்டி அழிக்கப்படுகின்றன. அந்த அணு கழிவுகளை மறுசுழற்சி செய்து அதில் இருந்து மீண்டும் மின்சாரம் தயாரிக்கும் ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதை கல்பாக்கத்தில் அமல்படுத் துவதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, அணு கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது, உலக நாடுகள் அனைத்தையும், நம்மை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு மிகப்பெரிய சாதனை திட்டமாகும். இந்த திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுவது கூடுதல் மகிழ்ச்சி.

#TamilSchoolmychoice

ஏனென்றால், நான் தமிழகத்தில் நீண்ட காலம் இருந்து, இந்த ஆராய்ச்சி பணியை மேற்கொண்டேன். இந்த புதிய முறையில் கூடுதல் மின்சாரம் கிடைப்பதுடன், உற்பத்தி செலவு குறைவாக இருக்கும். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கிறது என்பது தவறான குற்றச்சாட்டு.

கல்பாக்கத்தில் 2 அணு உலைகள் உள்ளன. ஒரு உலையில் கோளாறு ஏற்பட்டால் மற்றொரு அணு உலையில் வழக்கம்போல் மின் உற்பத்தி நடக்கும். அந்தந்த மாநிலங்களில் மின் தேவையை சமாளிக்க சூரிய ஒளி, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளில் இருந்து பெறப்படும் மின் உற்பத்தியை அதிகரித்தால், மின் மிகை நாடாக இந்தியா மாறிவிடும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் அணு உலையில் இருந்து தற்போது 75 சதவீதம் மின் உற்பத்தி நடந்து கொண்டு இருக்கிறது.

மிக தாமதமாக இந்த பணிகள் நடப்பதற்கு காரணம், மின் உற்பத்தியை விட மக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான். மின் உற்பத்தியில் விரைவில் 90 சதவீத இலக்கு எட்டப்படும். அதன்பிறகு உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய்தான் செல வாகும் என சேகர்போஸ் கூறினார்.