Home இந்தியா ஆம் ஆத்மி கட்சியால் மத்திய பிரதேசத்தில் மும்முனை போட்டி!

ஆம் ஆத்மி கட்சியால் மத்திய பிரதேசத்தில் மும்முனை போட்டி!

479
0
SHARE
Ad

FS_53332போபால், மார் 1 – மத்திய பிரதேசத்தில், அனைத்து தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால், அம்மாநிலத்தில், மும்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து இடங்களில் டில்லி சட்டசபை தேர்தலில், ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, நடைபெற உள்ள நாடாளுமன்றத்  தேர்தலில், அனைத்து மாநிலங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், காங்கிரசும், பா.ஜ.,வும், மாறி மாறி ஆட்சி நடத்தியுள்ளன. உத்ர  பிரதேச தொகுதிகளில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகளும், சுயேச்சைகளும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க பிரதான கட்சிகளுக்கு இணையாக, ஆம் ஆத்மி கட்சி மத்திய பிரதேசத்தில்  29 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.

ஏற்கனவே, ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இக்கட்சி அறிவித்து விட்டது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. “என்னதான் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் ஆம் ஆத்மி கட்சியால்மத்திய பிரதேசத்தில் பெரிய வெற்றியை ஈட்டி விடமுடியாது என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சி தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.