Home நாடு “அவர்கள் ஆசியர்கள் அல்ல – கால்பந்து வீரர் பாலோடெல்லி போல் இருந்தனர்” – டிசிஏ தகவல்

“அவர்கள் ஆசியர்கள் அல்ல – கால்பந்து வீரர் பாலோடெல்லி போல் இருந்தனர்” – டிசிஏ தகவல்

693
0
SHARE
Ad
AC_Milans_forward_Mario_Balotelli1003-540x360

மார்ச் 10 – போலி கடப்பிதழில் பயணம் செய்த இருவரும் ஆசியர்கள் போல் தோற்றமளித்தனர் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி நேற்று கூறினார்.

ஆனால் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உள்நாட்டு போக்குவரத்துத் துறை (டிசிஏ) தலைவர் அஸாருதீன் அப்துல் ரஹ்மான், அவர்கள் இருவரும் ஆசியர்கள் போல் தோற்றமளிக்கவில்லை என்றும், அதில் ஒருவர் கால்பந்து வீரர் பாலோடெல்லி போல் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மரியோ பாலோடெல்லி(படம்) என்பவர் இத்தாலியை சேர்ந்த கால்பந்து வீரர் ஆவார்.

#TamilSchoolmychoice

அந்த இருவருமே கறுப்பாக இருந்தனரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆமாம்” என்று அஸாருதீன் பதிலளித்துள்ளார்.

அப்படியானால், அவர்கள் இருவரும் ஆப்பிரிக்க நாட்டவரா? என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டதற்கு, அஸாருதீன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.