Home இந்தியா காங்கிரஸுக்கு எதிராக கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் – ராம்தேவ் பேட்டி!

காங்கிரஸுக்கு எதிராக கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் – ராம்தேவ் பேட்டி!

526
0
SHARE
Ad

5o-exp4_06-10-2012_23_0_1மும்பை, மார்ச் 18 – நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடுவதற்கு பதில் ஊழல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட வேண்டும் என்று யோகாகுரு பாபா ராம்தேவ் கூறினார். யோகாகுரு பாபா ராம்தேவ் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி போட்டியிடும் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் அவர் கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் செய்தார். அங்கு பாபா ராம்தேவ் நிருபர்களிடம் கூறியதாவது,

பிரதமராக நரேந்திரமோடி அவசரப்படுகிறார் என்று நான் கூறியதாக சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு நான் ஒருபோதும் கூறவில்லை. நாடு, அரசியல் மற்றும் பொருளாதார குழப்பத்தில் உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலையை மாற்ற நரேந்திர மோடிக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை. அவர் தான் வெற்றி பெற போகிறார். மேலும்,அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசின் பிரதிநிதி. இதனால் தான் வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பிரதிநிதியாக இல்லாவிட்டால், அந்த கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி கபில் சிபல் போன்றவர்களுக்கு எதிராக அவர் போட்டியிடலாமே. ஊழலுக்கு எதிராக அவர் செயல்படுவது உண்மை என்றால், ஊழல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக அவர் போட்டியிட வேண்டும் என பாபா ராம்தேவ் கூறினார்.