Home உலகம் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று விவாதம்!

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று விவாதம்!

471
0
SHARE
Ad

549613_640526032678039_1925738812_nஜெனீவா, மார்ச் 18 – இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த அமெரிக்க தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை ஆணையம் இன்று விவாதம் தொடங்குகிறது. அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் கூட்டாக தீர்மானத்தை கொண்டு வந்தன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரின் போது இலங்கை ராணுவம் நடத்திய போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த தீர்மானத்தின் விவாதம் தொடங்குகிறது. இந்திய உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தூதர்களின் கருத்துக்களின் அடிப்படையில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. அதை தொடர்ந்து இம்மாத இறுதியில் தீர்மானத்தின் மீது பொது வாக்கெடுப்பு நடைபெறும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்தது.