Home தொழில் நுட்பம் விண்டோஸ்-எக்ஸ்பி ‘ஆண்டி வைரஸ்’ உருவாக்கம் நிறுத்தம்!

விண்டோஸ்-எக்ஸ்பி ‘ஆண்டி வைரஸ்’ உருவாக்கம் நிறுத்தம்!

643
0
SHARE
Ad

Windows-XPமார் 24 – எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விண்டோஸ்-எக்ஸ்பி இயங்குதளத்திற்கான ‘ஆண்டி வைரஸ்’ (Anti Virus) களின் உருவாக்கம் நிறுத்தப்படுவதாக அதன் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால் கணினியில் விண்டோஸ்-எக்ஸ்பியை இயங்குதளமாகக் கொண்ட பயனாளர்கள் தங்கள் இயங்குதளத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இது குறித்து சைமன்டெக் (Symantec Anti Virus) நிறுவனத்தின் மூத்த தயாரிப்பு மேலாண்மை இயக்குனர் ஜெரி ஏகன் கூறியதாவது, “மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் விண்டோஸ்-எக்ஸ்பிக்கான பிழைகள் திருத்தும் நிரல்களை நிறுத்தவிருப்பதால், அதனை சார்ந்து இயங்கும் ‘ஆண்டி வைரஸ்’ (Anti Virus) களின் உருவாக்கமும் நிறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

விண்டோஸ்-எக்ஸ்பி இயங்குதளமானது 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சிறப்பாக செயல்பட்டாலும் ‘பழையெனக் கழிதல்’ என்பதற்கேற்ப அதன் சேவை 2014 ஆம் ஆண்டுடன் நிறைவு பெறுகின்றது.