Home இந்தியா ப.சிதம்பரம் – அழகிரி திடீர் சந்திப்பு!

ப.சிதம்பரம் – அழகிரி திடீர் சந்திப்பு!

583
0
SHARE
Ad

28-chidambaram-azhagiri434-600-jpgதிருப்பரங்குன்றம், மார்ச் 29 – சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும், அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர் அமரும் இடத்தில் சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களது சந்திப்புக்குப் பிறகு, விமான நிலையத்தில் அவர்களை சந்திக்கக் காத்திருந்த செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் புறக்கணித்துவிட்டு இருவரும் சென்றனர்.

அண்மைக் காலமாக வரிசையாக ஆதரவு கேட்டு வேற்றுக் கட்சியினர் அழகிரியை முற்றுகையிடுவதால், அவர் தேர்தல் நேரத்தில் வெளிநாடு செல்லப் போவதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில், ப.சிதம்பரமும், அழகிரியும் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.