ஈப்போ, ஏப்ரல் 7 – இன்றையக் காலக்கட்டத்தில் சீனப் பள்ளிகளில் மட்டும் 12 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்று, பிரதமர் துறையின் கீழ் செயல்படும், தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், பேராசிரியர் டத்தோ என்.எஸ் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில், மொத்தம் 320 தமிழ்ப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே கல்வி கற்கின்றனர்.
இதில் 18 தமிழ்ப்பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவானவர்களே கல்வி கற்கின்றனர். மேலும், இதில் 6 தமிழ்ப்பள்ளிகள் பேராக் மாநிலத்தில் உள்ளன.
இந்த நிலைமை இப்படியே நீடித்தால் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் எனவும், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் குறைந்துவிடுவார்கள் எனவும், தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத்திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், என்.எஸ் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.