Home வாழ் நலம் கொழுப்பை விரட்டும் பசலைக் கீரை!

கொழுப்பை விரட்டும் பசலைக் கீரை!

941
0
SHARE
Ad

pasalai keerai3ஏப்ரல் 7 – பசலைக் கீரைக்கு சமமான‌ அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.

இதிலுள்ள‌ ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.

* குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலை நாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள்.

#TamilSchoolmychoice

இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு இது எதிரியாக வேலை செய்கிறது.

* சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாக போட்டு அலசி எடுக்கவும்.

தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், வெளிறிய இலைகளையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.

இதில் மிக அதிகமாக உள்ள பச்சயம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. மேலும் இது ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், 05-1360045340-spinachஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

* ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.

இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

* கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாக சிறிது நேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும்போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு.

* தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே இதற்கு போதுமானது; கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள்.

*  தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சமாக உப்பு போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். திறந்த நிலையில் குறைந்த நேரமே வேக வைக்கவும்.

* இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

foods_health_004* ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 மிஹி (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.

* இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் தக்காளி சேர்த்துக் கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல்,

புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க் குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம். கொடிப்பசலையால் கொழுப்பை விரட்டுங்கள்.