Home கலை உலகம் மாமியார் எதிர்ப்பை மீறி மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா!

மாமியார் எதிர்ப்பை மீறி மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா!

681
0
SHARE
Ad

7494_1சென்னை, ஏப்ரல் 7 – மாமியார் ஜெயா பச்சனின் எதிர்ப்பை மீறி மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர்.

ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் நடிக்கும் வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்து சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் மீண்டும் நடிக்கக்கூடாது என்று மாமியார் ஜெயா பச்சன் கூறியதால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.
மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய முடிவு செய்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.

இந்நிலையில் மாமியாருடன் மனக்கசப்பு முற்றும் நிலை உருவானதால் மணிரத்னம் படத்திலிருந்து விலக எண்ணி இருந்தார். இதையடுத்து மணிரத்னமும் வேறு நடிகையை தேட முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யாராய் கை ஓங்கியது. மீண்டும் நடிக்க சம்மதம் சொன்னார்.

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதை மணிரத்னத்தின் மனைவி சுகாசினி உறுதி செய்ததுடன் மகேஷ்பாபு, நாகார்ஜுனா இருவரும் இணைந்து நடிப்பதையும் உறுதி செய்தார்.

வரும் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்று அவர் தெரிவித்திருக்கிறார். உளவாளி கதைக்கருவுடன் ஆக்ஷன் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு இந்தியா மற்றும் சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.