Home இந்தியா ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது – மு.க.அழகிரி!

ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது – மு.க.அழகிரி!

477
0
SHARE
Ad

stalin-azhagiriகம்பம், ஏப்ரல் 10 – திமுக-வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மு.க.அழகிரி நிருபர்களிடம் பேசுகையில், “மு.க.ஸ்டாலின் எனது சகோதரர், அவருடனான தனது உறவை யாராலும் பிரிக்க முடியாது.

கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோம்.” என்று கூறினார். மேலும், கருணாநிதி இல்லை என்றால், திமுகவே இல்லை, புதிய கட்சி தொடங்கும் எந்த எண்ணமும் தனக்கு இல்லை, என்றும் தெரிவித்தார்.