வாஷிங்டன், ஏப்ரல் 23 – நிலவின் மேற்பரப்பை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘நாசா’ அனுப்பிய விண்கலம் நொறுங்கியது.
இதுகுறித்து, நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நிலவின் மேற்பரப்பின் சுற்றுச்சூழல் மற்றும் தூசிகள் குறித்து ஆராய, இம்மாத துவக்கத்தில், ‘லேடீ’ என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.
கடந்த 14, 15 தேதிகளில் ஏற்பட்ட சந்திர கிரகணத்தின் போதும், இந்த விண்கலம், சிறப்பாக செயல்பட்டது. 3.85 லட்சம் கி.மீ., தொலைவில் இருந்து, ‘லேசர்’ ஒளிக்கற்றையை பூமிக்கு செலுத்தி, இந்த விண்கலம் சாதனை படைத்தது.
மணிக்கு, 5,800 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில், 2 கி.மீ. உயரத்தில் இருந்த போது, அதன் மீது ஒரு பொருள் மோதியது, இதனால் விண்கலம் நொறுங்கியது. இந்த விபத்து, நாசா விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட தோல்வி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.