Home தொழில் நுட்பம் ஆப்பிளின் ஐபோன் 5-ல் ஸ்லீப் பட்டன் குறைபாடு!

ஆப்பிளின் ஐபோன் 5-ல் ஸ்லீப் பட்டன் குறைபாடு!

537
0
SHARE
Ad

iphone-5-19-650x0ஏப்ரல் 28 – ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 5 திறன்பேசிகளின் ‘ஸ்லீப் பட்டன்’ (Sleep Button) – ல் குறைபாடு உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு மார்ச் முதல் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 திறன்பேசிகளின் ஸ்லீப் பட்டன்களில் சிறிய அளவிலான குறைபாடு உள்ளது. இதனால் திறன்பேசிகளை ‘ஸ்லீப் மோட்’ (Sleep mode)-க்கு மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று பயனாளர்கள் மத்தியில் கூறப்பட்டது.

தற்போது இந்தக் குறைபாட்டினை ஒப்புக்கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம், நேற்று முன்தினம் ஐபோன் 5 பயனர்களுக்கென பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. அங்கு பயனர்களுக்கு, குறைபாடுள்ள திறன்பேசிகளை பழுது நீக்கம் செய்து கொடுத்தது.

#TamilSchoolmychoice

மேலும் இது பற்றி அந்நிறுவனத்தின் இணைதளப் பக்கத்தில் கூறப்படுவதாவது:-” கடந்த 2013 ஆண்டு மார்ச் மாதம் முதல், உற்பத்தியான ஐபோன் 5 திறன்பேசிகளின், ஸ்லீப்/வேக் பட்டன்கள் குறைபாட்டுடன் வெளிவந்தது கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் அதன் தொழில்நுட்பம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5 உபயோகப்படுத்தும் பயனாளர்கள் தங்கள் திறன்பேசிகளை, ஆப்பிள் ஸ்டோர்களில் கொடுக்கும் பட்சத்தில், அத்தகைய குறைபாடுகள் விரைவில் சரி செய்து தரப்படும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.