Home வணிகம்/தொழில் நுட்பம் மலாயன் வங்கி: பற்று அட்டைகளின் மூலமான பணப் பரிவர்த்தனைகள் RM 7 பில்லியனாக அதிகரிப்பு!

மலாயன் வங்கி: பற்று அட்டைகளின் மூலமான பணப் பரிவர்த்தனைகள் RM 7 பில்லியனாக அதிகரிப்பு!

516
0
SHARE
Ad

maybankகோலாலம்பூர், மே 1 – மலேசிய வாடிக்கையாளர் மத்தியில் பற்று அட்டைகள் (Debit Card) மூலமான பணப் பரிவர்த்தனைகள், கடந்தாண்டை விட 20% அதிகரித்துள்ளதாகவும், கடந்தாண்டு RM5.7 பில்லியனாக இருந்தது, தற்போது RM7 பில்லியனாக உயர்ந்துள்ளது என மலாயன் வங்கி அறிவித்துள்ளது.

இது பற்றி மலாயன் வங்கியின் வட்டார அட்டைகள் வழங்கல் மற்றும் சொத்துகள் பிரிவின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,”மலேசியாவில் பற்று அட்டைகளின் மூலமான பணப் பரிவர்த்தனைகள் குறிப்பிடத்தக்க விதத்தில் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு, மலாயன் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு நடவடிக்கைகள், 25 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன் மதிப்பு RM5.7 பில்லியன் ஆகும். இந்த வளர்ச்சியின் காரணமாக எங்கள் வங்கி ‘விசா பிளாட்டினம் பற்று அட்டைகள்’ (Visa Platinum Debit Card)-ஐ அறிமுகப்படுத்தியது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய விசா பிளாட்டினம் அட்டைகள் பல சிறப்பு அம்சங்களைக் உள்ளடக்கியுள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக RM10,000 வரை பொருட்களை வாங்க இயலும்.

மாலயன் வங்கி அறிவித்துள்ள, இந்த அறிக்கையின் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ரொக்கப் பணம் இன்றி, அட்டைகள் மூலமாக பொருட்கள் வாங்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.