Home இந்தியா இந்திய நாடாளுமன்ற தேர்தல்: மேற்கு வங்கத்தில் 81.35%,பஞ்சாப்பில் 73 சதவீதம் வாக்குப்பதிவு!

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: மேற்கு வங்கத்தில் 81.35%,பஞ்சாப்பில் 73 சதவீதம் வாக்குப்பதிவு!

537
0
SHARE
Ad

votingபுதுடெல்லி, மே 1 – நாடாளுமன்ற தேர்தலின் 7-வது கட்டமாக  7 மாநிலங்கள்,  2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 நாடாளுமன்ற தொகுதிகளில்  நேற்று தேர்தல் நடந்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81.35  சதவீத வாக்குகள் பதிவானது.

ஏற்கனவே 6 கட்டங்களாக 349  தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று  7வது கட்டமாக மொத்தம் 89 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. காலை 7  மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக  நடந்தது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 62 சதவீத  வாக்குகள் பதிவானது.

#TamilSchoolmychoice

பஞ்சாப்பில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரே  கட்டமாக நடந்த தேர்தலில் 73% வாக்குகள் பதிவானது.  மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் நேற்று 3வது கட்டமாக  நடந்த தேர்தலில், 81.35% வாக்குகள் பதிவானது.

ஜம்மு காஷ்மீரின்  ஸ்ரீநகர் தொகுதியில் 25.62 சதவீத வாக்குகள் பதிவானது. தத்ரா  மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 85%வாக்குகளும்,  டாமன் டையு பகுதியில் 76% வாக்குகளும் பதிவாகின.