Home நாடு மலேசியத் தலைவர்களின் தொழிலாளர் தின வாழ்த்து!

மலேசியத் தலைவர்களின் தொழிலாளர் தின வாழ்த்து!

589
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், மே 1 – இன்று தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு நம் நாட்டு தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்:

உழைப்பவர்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள நஜிப், நாட்டில் அதிகரித்து வரும் பணியாளர் தேவைகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்:

பொருளாதாரத்தில் சிறந்தோங்கி விளங்க இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் உழைப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமது வாழ்த்து செய்தியில் பழனிவேல் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்:

இந்நாள் இன,மத,மொழி,நாடு என்ற எந்தவொரு பேதமுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியையும், அவர்களின் ஒற்றுமையையும் பறைசாற்றும் தினமாக, உன்னதத் திரு நாளாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்துள்ள டாக்டர் சுப்ரமணியம், தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்:

தொழிலாளர் சமுதாயம் மேம்பட, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட இந்த மே தினம் அமையவேண்டும் என வாழ்த்துகிறேன் என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்:

இன்றுள்ள காலகட்டத்தில் தொழிற்துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேலையில், விவசாயத்திலும் நாம் முக்கிய கவனம் செலுத்தினால் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என சரவணன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.