Home நாடு ஹுடுட் சட்ட விவகாரம்: பாஸ்-மஇகா சந்திப்பு

ஹுடுட் சட்ட விவகாரம்: பாஸ்-மஇகா சந்திப்பு

493
0
SHARE
Ad

MIC-Logo-300-X-200கோலாலம்பூர், மே 1 -பலத்த சர்ச்சைகளுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பாஸ் கட்சியின் ஹூடுட் சட்டத் திட்டம் குறித்து ம.இ.கா., பாஸ் கட்சியுடன் சந்திப்பு நடத்தும் என அதன் இரு தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

பல இன மக்கள் வாழும் மலேசியாவில் ஹுடுட் சட்ட அமலாக்கத்தினால் நாட்டில் உள்ளவர்களுக்கு  எவ்வகையான பாதிப்புகள் வரும் என்பதை ஆய்வு செய்வதற்கு மஇகா சிறப்புக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

மஇகாவின் சட்ட ஆலோசகர் செல்வம் மூக்கையா  தலைமையேற்று நடத்தும் இக்குழுவில் ஆலோசகராக மஇகாவின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜாரையும் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நியமித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஹுடுட் சட்ட விவகாரத்தை ஆராய்ந்து அமைச்சரவையிலும் மக்களவையிலுள்ள இந்திய பிரதிநிதிகளுக்கும் இந்த குழு அறிக்கை வழங்கும் என்று செல்வம் தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாதோருக்கு எவ்விதமான பாதிப்புகள் வரும் என்பது குறித்து ஆராயப்படும்  என்று கூறிய செல்வம் குழுவின் மற்ற உறுப்பினர்களை அறிவித்த பின்னர் அடுத்த வாரத்தில் முதல் கூட்டம் கூட்டப்படும் என்று  சொன்னார்.

பல்வேறு இனங்களும் சமயத்தினரும் வாழும் இந்நாட்டில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு மஇகா இணங்காது எனும் கட்சித் தலைவரின் நிலைப்பாட்டையும் செல்வம் தெளிவுபடுத்தினார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், நாட்டில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியாக விளங்கும் மஇகா ஒருபோதும் ஹுடுட் சட்டத்தை ஏற்காது என்றும் குற்றவாளிகளின் உறுப்புகளைத் துண்டிக்கும் செயலையும் ஏற்காது என்றும் தெரிவித்திருந்தார்.

“பாஸ் கட்சியை நேரடியாகச் சந்திப்போம்” – வேள்பாரி

Vell-Paariஇந்நிலையில், பாஸ் முன்மொழிந்துள்ள ஹுடுட் சட்ட விவகாரம் குறித்து பேச அக்கட்சியை நேரில் சந்திக்க மஇகா விரும்புவதாக ம.இ.கா கெப்போங் தொகுதி தலைவரும் ம.இ.கா வியூக இயக்குநருமான டத்தோஸ்ரீ சா.வேள்பாரி நேற்று கூறினார்.

மஇகாவின் வியூக இயக்குநரான அவர், பாஸ் துணைத் தலைவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சொன்னார். கிளந்தான் மாநிலத்தில் ஹுடுட் சட்டத்தை பாஸ் அரசாங்கம் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டிருப்பதற்கு தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹுடுட் சட்டம் இஸ்லாமியர்கள் மத்தியில் புனிதமான சமய நெறியாகப் போற்றப்படுவதை மஇகா மறுக்கவில்லை. ஆனால், மலேசியா போன்ற பல்வேறு இனங்கள் கலந்து வாழும் நாட்டில் அச்சட்டத்தை எவ்வாறு பிற மதத்தை பாதிக்காத வகையில் அமலாக்கம் செய்வது என்பதுதான் இன்னும் கேள்வியாக உள்ளது என்றார் வேள்பாரி.