Home வணிகம்/தொழில் நுட்பம் கூகுளுக்கு எதிரான ஆண்டிராய்டு காப்புரிமை வழக்கில் ஆரக்கிள் வெற்றி!

கூகுளுக்கு எதிரான ஆண்டிராய்டு காப்புரிமை வழக்கில் ஆரக்கிள் வெற்றி!

498
0
SHARE
Ad

andiமே 10 – தொழில்நுட்ப உலகில் முன்னோடியாகத் திகழும் கூகுளின் மீது ஆண்டிராய்டு காப்பு உரிமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சில வருடங்களில் திறன்பேசிகள் தயாரிப்பின் அசுர வளர்ச்சிக்கு காரணமான, ஆண்டிராய்டு இயங்குதள உருவாக்கத்தில், கூகுள் எந்த வித அனுமதியும் இன்றி ஆரக்கிள் நிறுவனத்தின் 37 Java API Packages-களைப் பயன்படுத்தியாதாக ஆரக்கிள் குற்றம் சாட்டியது. மேலும், இது தொடர்பாகா கடந்த 2010-ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ பெடெரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கின் தீர்ப்பு ஆரக்கிளிற்கு சாதகமாக அமைய வில்லை. எனவே, அந்நிறுவனம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தற்போது, மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “ஆண்டிராய்டு இயங்குதள உருவாக்கத்தில் ஆரக்கிளின் ஜாவா குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆரக்கிள் நிறுவனம் ஆண்டிராய்டு தொடர்பாக உரிமை கோர முடியும்” என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் மூலம், கூகுள், ஆரக்கிள் நிறுவனத்திற்கு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வரை நஷ்ட ஈடு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.