Home நாடு தமிழ்ப்பள்ளிகள் விவகாரம்: பொது இடத்தில் ஜசெக தலைவர்கள் வாக்குவாதம்!

தமிழ்ப்பள்ளிகள் விவகாரம்: பொது இடத்தில் ஜசெக தலைவர்கள் வாக்குவாதம்!

514
0
SHARE
Ad

Sivanesan-sliderபீடோர், மே 20 – சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பில் ஜசெக கட்சியைச் சேர்ந்த இரு இந்தியத் தலைவர்களுடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் ஒதுக்கீடுகள் குறித்து கேள்வி எழுப்பிய தம்மிடம், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய மானியங்கள் சரியாக கிடைப்பதில்லை என்றும், அதற்கு மாநில கல்வி, உயர்கல்வி மேம்பாட்டு பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹலிமா அலியின் பதில் குறித்தும் தான் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் கணபதி ராவ் தன்னிடம் தகாத சொற்களை உபயோகித்தார் என்றும் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தான் வெளியிட்ட அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் தன் மீது கணபதிராவ் வழக்குத் தொடக்கட்டும் என்றும் சிவசேனா சூளுரைத்துள்ளார்.

இவர்களின் இந்த வாக்குவாதம் நேற்று தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது நடைபெற்றுள்ளது.

V-Ganabatirauபொதுவாக ஜசெக விலுள்ள இந்தியத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடு செயல்பட்டு வரும் வேளையில் இந்த இரு தலைவர்களின் வாக்குவாதம் அக்கட்சியினருக்கே ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு தலைவர்கள் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வது அத்தொகுதியிலுள்ள இந்திய வாக்காளர்களுக்கு ஜசெக -வின் மீது இருக்கும் நன்மதிப்பை குறைக்க வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்தும், தமிழ்ப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு குறித்தும் நேற்று இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு வருகை புரிந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ காலிட் இப்ராகிமிடமும் இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளியான தனது அறிக்கையை சிலாங்கூர் இந்தியர்கள் முழுமையாக வாசித்து அதில் தவறு இருப்பின் அவர்கள் கேள்வி எழுப்பலாம் என்றும், இது கணபதிராவுக்கும் பொருந்தும் என்றும் சிவனேசன் கூறியுள்ளார்.