மும்பை, மே 24 – டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி,20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.