Home நாடு சோமசுந்தரம் போராட்டத்தினால் ம.இ.கா தலைவர்களிடையே மோதல்

சோமசுந்தரம் போராட்டத்தினால் ம.இ.கா தலைவர்களிடையே மோதல்

995
0
SHARE
Ad

Sivarraajhகோலாலம்பூர்மே 24 ம.இ.கா. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கெடா மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் தன்னை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல இடங்களில் வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இதனை வன்மையாக கண்டித்துள்ள சில மஇகா தலைவர்கள் இதன் பின்னணியில் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ் இருப்பதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில்மஇகா தகவல் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜை குறைகூறி சாடியிருக்கிறார். இளைஞர் பிரிவை சிவராஜ் முறையாக வழிநடத்த வேண்டும் என்றும் அவ்வாறு செயல்படுவதில் இருந்து அவர் தவறிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சோமசுந்தரம் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் மஇகா இளைஞர் பிரிவினர் கலந்து கொண்டிருக்கினறனர் என்பதால் சிவராஜ் மஇகா இளைஞர் பிரிவு பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று சிவசுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

சிவசுப்பிரமணியத்தின் கருத்தை மஇகா மத்தியசெயலவை உறுப்பினரும் மஇகா பத்து தொகுதித் தலைவருமான கே.ராமலிங்கம் ஆதரித்துள்ளார்.

முட்டாள்தனமான கருத்து – சிவராஜ் பதிலடி

இந்த இருவரின் கருத்துக்கும் பதிலளித்துள்ள இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ், தான் பதவி விலக வேண்டும் என கூறப்படும் அறிக்கைகள் முட்டாள் தனமானவை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

“நடந்து கொண்டிருப்பது விலக்கப்பட்ட சோமசுந்தரத்திற்கும் அவரை விலக்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் மத்திய செயலவைக்கும் இடையிலான மோதல். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லைதொடர்பும் இல்லை. சோமசுந்தரம் கொண்டுள்ள கோபத்தை நானும் உணர்கின்றேன். அவர் உணர்ச்சி வசப்பட்டு இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம். ஆனால் மஇகா இளைஞர் பிரிவுக்கும் சோமசுந்தரம் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சிவராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.