Home நாடு தாமஸ் கிண்ணம் இன்று நம் நாட்டுக்கு மீண்டும் திரும்புமா?

தாமஸ் கிண்ணம் இன்று நம் நாட்டுக்கு மீண்டும் திரும்புமா?

516
0
SHARE
Ad

Thomas CupPபுதுடில்லி, மே 25 – இன்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிற்பகல் 3.00 மணிக்கு (மலேசிய நேரம் மாலை 5.30 மணி) தொடங்கும் பூப்பந்து போட்டிக்கான தாமஸ் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தைக் காண பெரும்பாலான மலேசியர்கள் தங்கள் வீட்டுத் தொலைக்காட்சிகளின் முன் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

காரணம், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாமஸ் கிண்ணத்தை மீண்டும் வென்று நமது நாட்டுக்குக் கொண்டு வரும் அரிய வாய்ப்பு மலேசியா பூப்பந்து விளையாட்டாளர்களுக்கு இன்று கிடைத்திருக்கின்றது.

இறுதி ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதுவது சீனாவாக இருந்திருந்தால் நமது எதிர்பார்ப்பு அவ்வளவாக இருந்திருக்காது. ஆனால்,இந்த முறை மலேசியாவுடன் மோதுவது ஜப்பான் என்பதால், எப்படியும் மலேசியா வென்று விடலாம் என்ற நம்பிக்கை மலேசியர்களுக்குப் பிறந்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

1992ஆம் ஆண்டில் கடைசியாக தாமஸ் கிண்ணத்தை வென்ற மலேசியா அதன் பின்னர் 3 முறை இறுதியாட்டத்தில் நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்தோனிசியாவிடம் தோல்வியையே  தழுவி வந்துள்ளது.

மலேசியா சார்பாக இன்று களத்தில் இறங்கும் விளையாட்டாளர்கள் பின்வருமாறு:-

MALAYSIA

1) Lee Chong Wei – லீ சோங் வெய்

2) Tan Boon Heong/Hoon Thien How – தான் பூன் ஹியோங்/ஹூன் தியன் ஹாவ்   (இரட்டையர் ஆட்டம்)

3) Chong Wei Feng (சோங் வெய் ஃபெங்)

4) Goh V Shem/Tan Wee Kiong (கோ வி ஷெம்/தான் வீ கியோங்) -இரட்டையர்

5) Daren Liew (டேரன் லியூ)