Home கலை உலகம் வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் – சுந்தர்.சி!

வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் – சுந்தர்.சி!

774
0
SHARE
Ad

sundarcசென்னை, மே 26 – கிரி, தலைநகரம், நகரம், போன்ற படங்களில் வடிவேலுவுடன் நடித்து, இயக்கிய சுந்தர்.சி, திடீரென வடிவேலு வேண்டவே வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இருவரும் நல்ல நண்பர்களாக இருந்துவந்த நிலையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். வடிவேலுக்கு பதிலாக தனது அடுத்தடுத்த படங்களில் சந்தானத்தை பிரதான காமெடியனாக ஒப்பந்தம் செய்தார் சுந்தர்.சி.

‘கலகலப்பு படத்தில் அஞ்சலியின் முறைமாமனாக நடித்த சந்தானம். இப்போது சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘அரண்மனை படத்தில் பழைய நினைவுகளை மறந்துபோகும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

‘இப்படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் கூறப்பட்டதே என்று சுந்தரிடம் கேட்டபோது, ‘இதில் வடிவேலு நடிப்பதாக நான் எந்த நேரத்திலும் சொல்லவில்லை. இப்போதைக்கு அல்ல இனி எந்த படத்திலும் அவரை வைத்து இயக்க மாட்டேன் என்றார்.

சுந்தர்.சி இப்படி சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை? என முணுமுணுக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.